/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மலைமாடுகளை வரைமுறைப்படுத்தி மேய்ச்சலுக்கு அனுமதியுங்கள்: வாயில்லா ஜீவன்களின் பசி போக்க வழிகாட்டுங்க
/
மலைமாடுகளை வரைமுறைப்படுத்தி மேய்ச்சலுக்கு அனுமதியுங்கள்: வாயில்லா ஜீவன்களின் பசி போக்க வழிகாட்டுங்க
மலைமாடுகளை வரைமுறைப்படுத்தி மேய்ச்சலுக்கு அனுமதியுங்கள்: வாயில்லா ஜீவன்களின் பசி போக்க வழிகாட்டுங்க
மலைமாடுகளை வரைமுறைப்படுத்தி மேய்ச்சலுக்கு அனுமதியுங்கள்: வாயில்லா ஜீவன்களின் பசி போக்க வழிகாட்டுங்க
ADDED : மே 12, 2024 04:04 AM
தேனி மாவட்டத்தில் மலையோர கிராமங்களில், ஒவ்வொரு கிராமத்திலும் குறைந்தது ஆயிரம் மலைமாடுகள் வளர்க்கப்படுகின்றன.
ஆனால் இம் மாவட்டத்தை பொறுத்தவரை மலைமாடுகள் வளர்ப்போர் தீவனப் பிரச்னையில் சிக்கி தவித்து வருகின்றனர். குறிப்பாக மேகமலை புலிகள் காப்பகமாக மாறிய பின், வனத்துறையின் கெடுபிடிகள் அதிகரித்து விட்டது.
கடந்த 2006 ல் மேய்ச்சலுக்கு அனுமதி சீட்டுகள் வழங்கினர். 2020 க்கு பின் கெடுபிடிகள் அதிகரித்துள்ளது. இந்த பிரச்னைக்கென பல போராட்டங்கள் நடத்தியும், மனுக்கள் கொடுத்தும் பலனில்லை.
சின்ன ஒவுலாபுரத்தை சேர்ந்த மலைமாடுகள் வளர்ப்பவர்கள் கூறுகையில், 'மலைமாடுகளுக்கு தீவன பிரச்னை அதிகரித்துக் கொண்டே செல்வதால் மாடுகள் வளர்க்க முடியாத நிலை உருவாகி வருகிறது. வனத்துறையினர் வரைமுறைகளை ஏற்படுத்தி குறிப்பிட்ட சில பகுதிகளில் மேய்ச்சலுக்கு அனுமதிக்க வேண்டும்.'
வாழ்வாதார பிரச்னை
பாரம்பரிய மலைமாடுகள் வளர்ப்பவர்கள் கூறுகையில், '' நாட்டு மாடுகள் ஒராண்டு, இரண்டு ஆண்டு அல்லது மூன்றாண்டுக்கு ஒருமுறை கன்றுபோடும் பசுக்கள் உள்ளது.
100 மலைமாடுகள் இருந்தாலும் காளை 2 மட்டுமே இருக்கும். ஒரு நாளைக்கு காலையில் ஒரு லிட்டர், மாலையில் ஒரு லிட்டர் மட்டுமே பால் தரும்.
இது மருத்துவ குணம் கொண்டது. இதனை பெரும்பாலும் விற்க மாட்டோம். நோயாளிகளுக்கு என்றால் வழங்குவோம். ஆனால் தீவன பிரச்னை தீராத பிரச்னையாக உள்ளது. கால்நடை பல்கலை நாட்டு மாடுகளை பாதுகாக்கவும், அங்கீகாரம் பெற்றுத்தரவும் முயற்சி செய்கிறது. ஆனால் நாட்டு மாடுகளின் வாழ்வாதாரமான தீவன பிரச்னையை பற்றி பங்கலை கண்டு கொள்ளவில்லை.
சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும். மாடுகள் இருந்தால் தான் பல்கலை செயல்பட முடியும். எனவே தீவன பிரச்னையில் கால்நடை பல்கலை வனத்துறையினருடன் பேசவும், அல்லது மாற்று வழி, மரபு சாரா தீவன உற்பத்தி பற்றி விளக்க வேண்டும் என்றனர்.