ADDED : ஆக 30, 2024 05:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியகுளம் : பெரியகுளம் எல்.ஐ.சி., அலுவலகம் வளாகத்தில் ஊழியர் சங்கம் சார்பில், 'மேற்குவங்கமாநிலம் கோல்கட்டாவில் அரசு மருத்துவக் கல்லூரியில் பெண் பயிற்சி டாக்டர் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
குற்றவாளிகளை கைது செய்ய கோரியும், இந்தியா முழுவதும் மருத்துவரின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கிளைத் தலைவர் நாகபாண்டி தலைமை வகித்தார்.
கிளை செயலாளர் சிவக்குமார் உட்பட பலர் பங்கேற்றனர். கிளை பொறுப்பாளர் கரந்தமலை நன்றி கூறினார்.

