ADDED : செப் 14, 2024 05:42 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேனி மாவட்ட பள்ளிக் கல்வித்துறை அமைச்சுப் பணியாளர் நலச்சங்கத்தின் சார்பில், சி.இ.ஓ., அலுவலகம் முன், 'எமிஸ்' பணிகளால் கூடுதல் பணிச்சுவை ஏற்படுவதை சீரமைக்கவும், பள்ளிகளில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், இரவுக் காவலர் துாய்மைப் பணியாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உட்பட 9 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்டத் தலைவர் திருக்குமரன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் விஜயராகவன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ஜெயபிரகாஷ், சுகுமார், கோவிந்தராஜன், ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட மகளிரணி செயலாளர் கனகதுர்காதேவி, மாவட்டப் பொருளாளர் ரஞசித்குமார் பங்கேற்றனர். மாவட்டத் துணைத் தலைவர் பிரேம்குமார் நன்றி தெரிவித்தார். சி.இ.ஓ., இந்திராணியிடம் கோரிக்கை மனு அளித்தனர்.