/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சித்திரை திருவிழாவில் பூக்குழி இறங்கிய பக்தர்கள்
/
சித்திரை திருவிழாவில் பூக்குழி இறங்கிய பக்தர்கள்
ADDED : மே 01, 2024 08:03 AM

கூடலுார்: கூடலுார் செல்வ முத்துமாரியம்மன் கோயிலில் சித்திரை திருவிழா நடந்தது.
வடக்கு போலீஸ் ஸ்டேஷன் அருகே போலஜ்ஜியம்மன் கோயிலில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் 4 அடியில் இருந்து 16 அடி வரை நீளமுள்ள வேல் குத்தியும், பால்குடம் எடுத்தும் ஊர்வலமாக வந்தனர்.
எல்.எப்., ரோடு, பழைய பஸ் ஸ்டாண்ட், காமாட்சியம்மன் கோயில் தெரு வழியாக கோயிலை அடைந்தனர். அமைக்கப்பட்டிருந்த பூக்குழியில் இறங்கி தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர்.
அம்மன் சந்தன அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடந்தது. மழை வேண்டி சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. லோகநாயகி கிரிதரன் அன்னதானம் வழங்கி முளைப்பாரி எடுத்த அனைவருக்கும் சிறப்பு பரிசு வழங்கினார். பக்தர்கள் விரதம் இருந்து அம்மனை வழிபட்டனர்.