/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கோயில்களில் தினகரன் சுவாமி தரிசனம் ஆர்.டி.ஓ., வுடன் வாக்குவாதம்
/
கோயில்களில் தினகரன் சுவாமி தரிசனம் ஆர்.டி.ஓ., வுடன் வாக்குவாதம்
கோயில்களில் தினகரன் சுவாமி தரிசனம் ஆர்.டி.ஓ., வுடன் வாக்குவாதம்
கோயில்களில் தினகரன் சுவாமி தரிசனம் ஆர்.டி.ஓ., வுடன் வாக்குவாதம்
ADDED : ஏப் 19, 2024 05:52 AM
கம்பம்: கம்பம் அருகே அனுமந்தன்பட்டி, புதுப்பட்டி, உத்தமபாளையம் கோயில்களில் தினகரன் சுவாமி தரிசனம் செய்தார். விதிமீறல் என கண்டித்த ஆர்.டி.ஒ விடம் வாக்குவாதம் செய்தார்.
உத்தமபாளையம் அருகில் உள்ள அனுமந்தன்பட்டியில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலுக்கு நேற்று மாலை 6:30 மணிக்கு அ.ம.மு.க., வேட்பாளர் தினகரன் வந்து சுவாமி தரிசனம் செய்தார்.
அவர் வருவதற்கு முன்பே நூற்றுக்கணக்கில் கட்சி நிர்வாகிகள் கூடினர். பட்டுவாடா செய்யப் போவதாக தகவல் பரவியதால் பொதுமக்கள் கூட்டமும் அதிகரித்தது. பட்டுவாடா நடக்கப் போவதாக தகவல் பரவி அ.தி.மு.க., தி.மு.க. வினர் திரண்டனர்.
தி.மு.க. வேட்பாளர் தங்க தமிழ்செல்வனும் அனுமந்தன்பட்டிக்கு வந்தார். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டு போலீசார் குவிக்கப்பட்டனர். தினகரன் சுவாமி தரிசனம் செய்து விட்டு க.புதுப்பட்டி சென்றார். அங்குள்ள மாரியம்மன்,பேச்சியம்மன் கோயில்களில் சுவாமி தரிசனம் செய்து சென்றார்.இதனை கண்டித்து புதுப்பட்டியில் ரோடு மறியலில் ஈடுபட்ட தி.மு.க.,வினரை போலீசார் சமாதானம் செய்தனர்.
பின் அனுமந்தன்பட்டியில் அ.ம.மு.க. பேரூர் செயலாளர் கர்ணன் வீட்டிற்கு சென்றார்.
தொடர்ந்து உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். அங்கு வந்த ஆர். டி.ஓ., தாட்சயினி, 'இது தேர்தல் விதிமீறல்' என தினகரனிடம் தெரிவித்தார். இதற்கு பதிலளித்த தினகரன்,' நான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வந்துள்ளேன்.
என்னுடன் கட்சியினர் வந்தால் நான் என்ன செய்ய முடியும்.
நான் என்ன ஓட்டுக்கு பணம் தருகிறேனா', என்று எதிர் கேள்வி எழுப்பினார். பின் உத்தமபாளையம் ஜமாத் தலைவர் தர்வேஷ் முகைதீன் வீட்டிற்கு சென்று ஆதரவு திரட்டினார். அவருடன் திரளாக கட்சியினரும் வந்தனர்.

