/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பிரசாரம் செய்வதில் அ.தி.மு.க., -அ.ம.மு.க., வினர் இடையே தகராறு
/
பிரசாரம் செய்வதில் அ.தி.மு.க., -அ.ம.மு.க., வினர் இடையே தகராறு
பிரசாரம் செய்வதில் அ.தி.மு.க., -அ.ம.மு.க., வினர் இடையே தகராறு
பிரசாரம் செய்வதில் அ.தி.மு.க., -அ.ம.மு.க., வினர் இடையே தகராறு
ADDED : ஏப் 06, 2024 04:32 AM
போடி : போடி அருகே சங்கராபுரத்தில் வாகன பிரசாரம் செய்வதில் அ.தி.மு.க., - அ.ம.மு.க., நிர்வாகிகளுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.
தேனி தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் நாராயணசாமி நேற்று இரவு போடி அருகே திம்மிநாயக்கன்பட்டி, குப்பனாசாரிபட்டி, பொட்டிப்புரம், எரணம்பட்டி பகுதிகளில் பிரசாரம் செய்தார்.
பின் சங்கராபுரம் வந்தார். அப்போது எஸ்.தர்மத்துபட்டியில் இருந்து அ.ம.மு.க., நிர்வாகிகள் தினகரனை ஆதரித்து வாகன பிரச்சாரம் செய்தபடி சங்கராபுரம் வந்தனர்.
அ.தி.மு.க., வேட்பாளர் பிரசாரம் செய்து வருவது தெரிந்தும் அ.ம.மு.க., வினர் அங்கிருந்து வாகனத்தை எடுத்துச் செல்லாமல் பிரசாரம் செய்தபடி இருந்தனர். வாகனத்தை எடுத்துச் செல்ல போலீசார் கூறியதால் சிறிது தூரம் கடந்து சென்றனர். அதன் பின் அ.தி.மு.க., வேட்பாளர் நாராயணசாமி பிரசாரம் செய்து விட்டு எஸ். தர்மத்துப்பட்டிக்குசென்றார்.இந்நிலையில் அ.தி.மு.க., வேட்பாளர் வாகனம் சென்றவுடன், ' எங்கள் வேட்பாளர் பிரசாரம் செய்ய வரும் போது வீண் சச்சரவு ஏற்படுத்தும் வகையில் அ.ம.மு.க., வினர் பிரச்சாரம் செய்யலாம்' என அ.தி.மு.க., நிர்வாகிகள் கேட்டுள்ளனர். இதனால் அ.தி.மு.க., - அ.ம.மு.க., நிர்வாகிகளுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. அங்கு இருந்த போலீசார் சமாதானம் செய்து அ.ம.மு.க., வினர் வந்த வாகனத்தை எடுத்து செல்ல கூறியதன் பேரில் கலைந்து சென்றனர்.

