/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஜிபே எண்கள் சேகரிப்பதில் தி.மு.க. அ.ம.மு.க. இடையே போட்டி
/
ஜிபே எண்கள் சேகரிப்பதில் தி.மு.க. அ.ம.மு.க. இடையே போட்டி
ஜிபே எண்கள் சேகரிப்பதில் தி.மு.க. அ.ம.மு.க. இடையே போட்டி
ஜிபே எண்கள் சேகரிப்பதில் தி.மு.க. அ.ம.மு.க. இடையே போட்டி
ADDED : மார் 31, 2024 04:43 AM
கம்பம், : தேனி தொகுதியில் வாக்காளர்களின் ஜிபே எண்கள் சேகரிப்பதில் தி.மு.க. அ.ம.மு.க. இடையே போட்டி நிலவுகிறது.
தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்த தேர்தல் கமிஷன் கடும் முயற்சி மேற்கொண்டு வருகிறது.ஆனால் வாக்காளர்கள்தேர்தல் என்றாலேவேட்பாளர்கள்எவ்வளவு தருவார்என்ற மனநிலையில் உள்ளனர்.இருந்த போதும் அரசியல் கட்சிகள், அதிகாரிகளின் கண்களில் மண்ணைத் தூவி விட்டு பணப்பட்டுவாடாவை ஒவ்வொரு தேர்தலிலும் அரங்கேற்றுகின்றனர்.
தேனி தொகுதியில்தி.மு.க.,தங்க தமிழ்செல்வன், அ.தி.மு.க. நாராயணசாமி, அ.ம.மு.க., தினகரன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
அரசியல் கட்சிகள்எப்படி வாக்காளர்களை கவர்வதுஎன தீவிர ஆலோசனையில் இறங்கியுள்ளன.தேர்தல் நெருங்க நெருங்க தேர்தல் கமிஷனின் கெடுபிடிகள் அதிகரிக்கிறது. கடும் கெடுபிடியால்பூத் கமிட்டி மூலமாக ஒவ்வொரு வீட்டிற்கும் ஜிபே மூலம்கவனிக்கவும்முடிவு செய்துள்ளனர்.இதற்காக கட்சிகளின்பூத் கமிட்டியினர், வீடு வீடாக ஜிபே எண்களை கலெக்ட் செய்யும் பணியை சத்தமில்லாமல் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த 'ஜிபே' எண்களை கலெக்ட் செய்யும் பணியில் தி.மு.க. அ.ம.மு.க. தீவிரம் காட்டி வருகிறது. பாதி பேர்களுக்கு நேரடியாகவும், பாதி பேர்களுக்கு'ஜிபே' மூலம் பட்டுவாடா செய்யலாமா என்ற ஆலோசனையிலும் இறங்கியுள்ளனர்.

