/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
நுண் பார்வையாளர்களுக்கு இன்று தேர்தல் பயிற்சி
/
நுண் பார்வையாளர்களுக்கு இன்று தேர்தல் பயிற்சி
ADDED : ஏப் 01, 2024 11:57 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : தேனி லோக்சபா தொகுதியில் 6 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இவற்றில் 4 தொகுதிகள் மாவட்டத்தில் உள்ளன. இவற்றில் 231 பதட்டமான ஓட்டுச்சாவடிகளாக கண்டறியப்பட்டுள்ளன. இந்த ஓட்டுச்சாவடிகளுக்கு நுண் மேற்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு கலெக்டர் அலுவலகத்தில் பயிற்சி வகுப்புகள் நடக்கிறது.
மேலும் ஓட்டுச்சாவடிகளில் பணிபுரிய உள்ள ஆசிரியர்கள், அலுவலர்களுக்கு முதற்கட்ட பயிற்சி முடிந்துள்ளது. இரண்டாம்கட்ட பயிற்சி ஏப்.,7 ல் வழங்கப்பட உள்ளது. இந்நிலையில் ஓட்டுச்சாவடியில் பணிபுரிபவர்கள் எந்த சட்டசபை தொகுயில் பணிபுரிய உள்ளனர் என்பதற்கான தேர்வும் நடக்க உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

