/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சின்ன வாய்க்கால் கரையில் ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டும்
/
சின்ன வாய்க்கால் கரையில் ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டும்
சின்ன வாய்க்கால் கரையில் ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டும்
சின்ன வாய்க்கால் கரையில் ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டும்
ADDED : ஆக 15, 2024 03:54 AM
சின்னமனூர் : சின்னமனூர் சின்ன வாய்க்கால் கரையில் உள்ள ஆக்கிரமிப்புக்களை அகற்றி எளிதாக வயல்களுக்கு சென்று வர நீர்வளத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சின்ன வாய்க்கால் மூலமாக 1800 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.
முல்லைப்பெரியாற்று நீர், தாமரைகுளம், கருங்கட்டான்குளம் உபரி நீர் இந்த வாய்க்கால் வழியாக செல்கிறது. இந்த வாய்க்கால் கரை முழுவதும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.
இதனால் விவசாயிகள், வேளாண் பணிகள் மேற்கொள்ள வயல்களுக்கு செல்ல முடியவில்லை. விளைந்த விளைபொருள்களை கொண்டு வர முடியாத நிலை உள்ளது.
எனவே நீர்வளத்துறை அதிகாரிகள் சின்ன வாய்க்கால் கரையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரியுள்ளனர்.