/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
நுழைவு வாயில் கேட் இல்லாத அரசு பள்ளியில் தேர்வு மையம்
/
நுழைவு வாயில் கேட் இல்லாத அரசு பள்ளியில் தேர்வு மையம்
நுழைவு வாயில் கேட் இல்லாத அரசு பள்ளியில் தேர்வு மையம்
நுழைவு வாயில் கேட் இல்லாத அரசு பள்ளியில் தேர்வு மையம்
ADDED : மார் 29, 2024 05:56 AM

தேவதானப்பட்டி : ஜெயமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளி நுழைவு வாயில் கேட் இன்றி திறந்த நிலையில் உள்ளது. இங்கு பத்தாம் வகுப்பு தேர்வு மையம் செயல்படுவதால் பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது.
பெரியகுளம் அருகே ஜெயமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு மையம் செயல்படுகிறது. இப் பள்ளியில் குள்ளப்புரம் அரசு உயர்நிலைப் பள்ளி, பொம்மிநாயக்கன்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் என 114 பேர் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி வருகின்றனர்.
இப் பள்ளியில் பல மாதங்களாக நுழைவு வாயிலில் கேட் இன்றி திறந்த வெளியாக உள்ளது. இதனால் இரவில் பள்ளி வகுப்பறைகளில் சமூக விரோதிகள் வந்து ர் மது குடிக்கும் இடமாக பயன் படுத்துகின்றனர். கல்வித்துறை இப் பள்ளியின் பாதுகாப்பை உறுதி செய்ய நுழைவு வாயிலில் கேட் அமைக்க பெற்றோர் வலியுறுத்துகின்றனர்.