/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சின்ன வெங்காயம் விலை உயர்வால் விதைப்புக்கு தயாராகும் விவசாயிகள்
/
சின்ன வெங்காயம் விலை உயர்வால் விதைப்புக்கு தயாராகும் விவசாயிகள்
சின்ன வெங்காயம் விலை உயர்வால் விதைப்புக்கு தயாராகும் விவசாயிகள்
சின்ன வெங்காயம் விலை உயர்வால் விதைப்புக்கு தயாராகும் விவசாயிகள்
ADDED : மே 15, 2024 07:09 AM

ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி பகுதியில் சின்ன வெங்காயத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து உயர்கிறது. வெங்காயத்திற்கான கிராக்கி தொடரும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் சின்ன வெங்காயம் விதைப்பு செய்ய தயாராகி வருகின்றனர்.
ஆண்டிபட்டி பகுதியில் குன்னூர், அரப்படித்தேவன்பட்டி, திருமலாபுரம், ஏத்தக்கோயில், சித்தையகவுண்டன்பட்டி, மறவபட்டி, பாலக்கோம்பை, ராயவேலூர், ராஜதானி, சித்தார்பட்டி, கணேசபுரம் உட்பட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் வெங்காயம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாக சில்லறை விலையில் கிலோ ரூ.20 முதல் 30 வரை இருந்த சின்ன வெங்காயம் விலை தற்போது ரூ.50 முதல் 60 வரை உயர்ந்துள்ளது. வெங்காயத்தின் விலை உயர்வுக்கு காரணம் தெரியாமல் பொதுமக்கள் தவிக்கின்றனர்.
வியாபாரிகள் கூறியதாவது: வெங்காய ஏற்றுமதிக்கான கட்டுப்பாடுகள் தற்போது தளர்த்தப்பட்டு ஏற்றுமதி அதிகரித்து வருகிறது. வெங்காய வரத்து போதுமான அளவு உள்ளது. ஆண்டிபட்டி பகுதியில் இருந்து வெளியூர் விற்பனைக்கு அதிகம் செல்கிறது.
விவசாயிகள் கூறியதாவது: கடந்த மூன்று மாதத்திற்கு முன் நடவு செய்த விவசாயிகள் தற்போது அறுவடை செய்து வருகின்றனர். தற்போதுள்ள விலை உயர்வு அறுவடை செய்யும் விவசாயிகளுக்கு சாதகமாக உள்ளது. விதை வெங்காயத்திற்கு தட்டுப்பாடு இருப்பதால் வெளியூர்களில் இருந்து விதை வெங்காயத்தை கிலோவுக்கு ரூ.50 வரை செலவு செய்து வாங்கி நடவுக்கு தயாராகி வருகின்றனர் என்றனர்.

