/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
நம்மாழ்வார் விருதுக்கு விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்
/
நம்மாழ்வார் விருதுக்கு விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்
நம்மாழ்வார் விருதுக்கு விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்
நம்மாழ்வார் விருதுக்கு விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்
ADDED : ஆக 01, 2024 05:42 AM
தேனி: மாவட்டத்தில் ரசாயன பொருட்கள் பயன்படுத்தாமல் விவசாயம் செய்யும் விவசாயிகள் நம்மாழ்வார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என வேளாண் துறையினர் தெரிவித்தனர்.
தமிழகத்தில் உயர்ம வேளாண்மையில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் 3 பேருக்கு நம்மாழ்வார் விருது வழங்கப்பட உள்ளது.
முதல் பரிசு ரூ.2.50 லட்சம், 2ம் பரிசு ரூ. 1.50 லட்சம், 3ம் பரிசு ரூ.ஒரு லட்சம் என விருதுகள் வழங்கப்பட உள்ளது. விண்ணப்பிக்க விரும்புபவர்கள் விவசாயிகள் குறைந்தபட்சம் ஒரு ஏக்கரில் உயிர்ம வேளாண்மையில் பயிர்சாகுபடி செய்திருக்க வேண்டும்.
முழுநேர உயிர்ம விவசாயம் செய்ய வேண்டும். விவசாயத்தில் ரசாயன பொருட்களை பயன்படுத்தியிருக்க கூடாது.
உயிர்ம வேளாண்மையில் ஈடுபட்டதற்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிக்க விரும்பும் விவசாயிகள் https://www.tnagrisnet.tn.gov.in என்ற இணையதளத்தில் செப்.,15க்குள் பதிவு செய்ய வேண்டும்.
பதிவு கட்டணமாக ரூ. 100ஐ வேளாண் விரிவாக்க மையத்தில் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விபரங்களுக்கு அருகில் உள்ள வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என வேளாண் துறையினர் தெரிவித்தனர்.