ADDED : செப் 13, 2024 06:08 AM
கடமலைக்குண்டு: கண்டமனூர் அருகே மரிக்குண்டு கிராமத்தில் பாழடைந்த கிணற்றில் இறந்த பெண் உடலை கைப்பற்றி போலீசார் விசாரிக்கின்றனர்.
மரிக்குண்டு தோட்ட கிணற்றில் 50 வயது மதிக்க தக்க பெண் சடலம் மிதப்பதாக கண்டமனுார் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உடலை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். கிணற்றில் மரம், செடி, கொடிகள் வளர்ந்த நிலையில் 10 அடிக்கும் மேல் நீர் இருந்தது. இதனால் உடலை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது. கண்டமனூர் தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் போலீசார் பெண்ணின் உடலை கிணற்றிலிருந்து மீட்டனர்.
இறந்த பெண் உடலில் காயங்கள் இருப்பதால் யாரோ கொலை செய்து உடலை கிணற்றுக்குள் வீசி சென்றிருக்கலாம் என்று தெரியவந்துள்ளது. தேனி எஸ்.பி., சிவபிரசாத் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.