
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவதானப்பட்டி: தேவதானப்பட்டி அருகே டி.வாடிப்பட்டி வடக்கு தெருவைச் சேர்ந்த குழந்தைவேல் மனைவி லட்சுமி 56.
நேற்று டி.வாடிப்பட்டி ஊராட்சியில் நூறு நாள் பணியில் இருந்தவர், வெயில் தாக்கத்தால் மயங்கி விழுந்தார். உடன் வேலை செய்பவர்கள் பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதனை செய்த டாக்டர், லட்சுமி இறந்துவிட்டதாக தெரிவித்தார். தேவதானப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.