ADDED : மார் 31, 2024 03:44 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : தேனி கலெக்டர் அலுவலக பின்புறம் உள்ள பரமேஸ்வரன் கோயில் கரட்டில் பரவிய தீயை தீயணைப்புத்துறை, வனத்துறையினர் இணைந்து அணைத்தனர்.
கரடின் உச்சியில் கோயில் உள்ளது. கோயிலுக்கு கிழக்கு பகுதியில் புற்கள், செடிகொடிகளில் நேற்று மாலை தீ பற்றியது. தீயீல் மரங்கள், செடிகள் எரிந்து கருகின. தேனி தீயணைப்பு அலுவலர் ஜெயராணி தலைமையிலான வீரர்கள் தீயணைக்க சென்றனர். கோயில் கிழக்கு பகுதிக்கு தண்ணீர் குழாய் கொண்டு செல்ல முடியவில்லை. பின் எஸ்.பி., முகாம் அலுவலகத்தின் பின்புறம் வழியாக தீ பரவாமல் இருக்க வனத்துறையினருடன் இணைந்து தீயை அணைக்கும் பணிகளில் ஈடுபட்டனர்.

