sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

மேகமலையில் பட்டா நிலங்களை வாங்க வனத்துறை ஆர்வம்: 150 ஏக்கர் விலைக்கு வாங்க பேச்சுவார்த்தை

/

மேகமலையில் பட்டா நிலங்களை வாங்க வனத்துறை ஆர்வம்: 150 ஏக்கர் விலைக்கு வாங்க பேச்சுவார்த்தை

மேகமலையில் பட்டா நிலங்களை வாங்க வனத்துறை ஆர்வம்: 150 ஏக்கர் விலைக்கு வாங்க பேச்சுவார்த்தை

மேகமலையில் பட்டா நிலங்களை வாங்க வனத்துறை ஆர்வம்: 150 ஏக்கர் விலைக்கு வாங்க பேச்சுவார்த்தை


ADDED : ஆக 03, 2024 05:19 AM

Google News

ADDED : ஆக 03, 2024 05:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கம்பம்: மேகமலை பகுதியில் தனியார் பட்டா நிலங்களை விலைக்கு வாங்க புலிகள் காப்பக வனத்துறை ஆர்வம் காட்டி வருகின்றது.

மேகமலை பகுதியை ஸ்ரீவில்லிப்புத்தூர் சாம்பல் நிறு அணில்கள் சரணாலயத்துடன் இணைத்து புலிகள் காப்பகமாக 2021 ல் மத்திய அரசு அறிவித்தது. இந்தியாவில் தற்போது 55 புலிகள் காப்பகங்கள் உள்ளன. மேகமலை 51 வது புலிகள் காப்பகமாகவும், தமிழகத்தின் 5 வது புலிகள் காப்பகமாகவும் அறிவிக்கப்பட்டது. மேகமலை பகுதியில் கண்டமனூர், சாப்டூர், எரசக்கநாயகக்கனூர் ஜமீன்களுக்கு சொந்தமான காடுகள் தனியார் பட்டா காடுகளாக இன்றைக்கும் காபி, ஏலம், தேயிலை சாகுபடி செய்து வருகின்றனர்.

ஆனால் புலிகள் காப்பகமாக மாறியதால் தனியார் பட்டா காடுகளுக்கு நடந்து செல்வதற்குரிய பாதை சீரமைப்பதில் வனத்துறையினருக்கும், எஸ்டேட் உரிமையாளர்களுக்கும் அவ்வப்போது பிரச்னை ஏற்படும்.

இதற்கிடையே தொழிலாளர் பிரச்னை, வன உயிரினங்கள் நடமாட்டம் அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் உள்ளன.

எனவே தனியார் பட்டா காடுகளை வனத்துறையினர் விலைக்கு வாங்கும் பணியை துவங்கி உள்ளனர்.

கடந்தாண்டு 7 பேர்களிடமிருந்து 30.41 ஏக்கர் காடுகளை ரூ.2.33 கோடிக்கு வனத்துறை வாங்கியது. இதற்கான பத்திர பதிவுகள் முடிந்துள்ளது. மாவட்ட விலை நிர்ணய கமிட்டி விலையை நிர்ணயம் செய்தது. கலெக்டர் ஷஜீவனா, புலிகள் காப்பக துணை இயக்குநர் ஆனந்த் இதற்கான முயற்சிகளை மேற்கொண்டனர்.

தற்போது மேகமலை பகுதியில் ஏகன் ஜகா பகுதியில் 16 பேர்களிடமிருந்து சுமார் 150 ஏக்கர் வரை விலைக்கு வாங்க பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறது என வனத்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.

இது தொடர்பாக தனியார் எஸ்டேட் உரிமையாளர் ஒருவர் கூறுகையில், எஸ்டேட்டிற்கு செல்ல பாதை இல்லை. வன உயிரினங்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. மறுபுறம் வனத்துறையினரரின் கெடுபிடியும் அதிகமாக உள்ளது.

பாதையை சீரமைக்க முடியவில்லை. எனவே,16 பேர்கள் தங்களுக்கு சொந்தமான காடுகளை வனத்துறைக்கு விற்க முடிவு செய்துள்ளோம் என்றார்.






      Dinamalar
      Follow us