/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஜி.கே. பொன்னையா ஜூவல்லர்ஸ் திறப்பு விழா
/
ஜி.கே. பொன்னையா ஜூவல்லர்ஸ் திறப்பு விழா
ADDED : ஜூன் 11, 2024 07:15 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போடி : போடி தெற்கு ராஜ வீதியில் தாய் ஸ்தலம் சவுடாம்பிகை அம்மன் கோயில் அருகே 75 ஆவது ஆண்டு வைர விழாவை நோக்கி புதிய கிளை நிறுவனமாக ஜி.கே. பொன்னையா ஜூவல்லர்ஸ் ஏ.சி., ஹால் மார்க் ஷோரூம் திறப்பு விழா நேற்று நடந்தது.
உரிமையாளர்கள் செந்தில்குமார் - மகாலட்சுமி, குருகிருஷ்ணன், ஜெயா தலைமை வகித்தனர்.
உரிமையாளர் மகாலட்சுமி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். விழாவில் குடும்பத்தினர் அசோக் விஸ்வநாத், ஜெயா, பாலு நாத், வர்த்தகர்கள், தேனி மாவட்ட ஜுவல்லர்ஸ் சங்க நிர்வாகிகள், அனைத்துக் கட்சி பிரமுகர்கள், வாடிக்கையாளர்கள் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.