/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சுகாதார செவிலியர்கள் தேனியில் ஆர்ப்பாட்டம்
/
சுகாதார செவிலியர்கள் தேனியில் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூன் 22, 2024 05:53 AM

தேனி; தேனி கலெக்டர் அலுவலக நுழைவாயில் முன் தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியர்கள் சங்கம் சார்பில், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நிதியுதவி திட்டப் பணியை சமூகநலத்துறையில் ஒப்படைத்து, கிராம சுகாதார செவிலியர்கள் கவனித்து வரும் தாய் சேய் நலப்பணி, தடுப்பூசி பணி, குடும்பநலப்பணிகள் சிறப்பாக நடக்க உத்தரவிட வேண்டும்.
ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர்களை நியமிக்க வேண்டும். கிராம சுகாதார செவிலியர்களுக்கு பதவி உயர்வு வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்டத் தலைவர் வசந்தா தலைமை வகித்தார். மாநில நிர்வாகிகள் சசிகலா, நிஷாங்கனி முன்னிலை வகித்தனர். மாவட்ட பொருளாளர் எலியட் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். செயலாளர் ராமலட்சுமி நன்றி கூறினார்.