/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
அலுவலர்களுக்கு வருமான வரி விழிப்புணர்வு
/
அலுவலர்களுக்கு வருமான வரி விழிப்புணர்வு
ADDED : ஆக 01, 2024 05:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேனி மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அரசின் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கு வருமானவரி பற்றிய விழிப்புணர்வு கூட்டம் கலெக்டர் ஷஜீனா தலைமையில் நடந்தது.
மதுரை வருமானவரித்துறை துணை ஆணையர் மதுசூதன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பணம் பெற்று வழங்கும் அலுவலர்கள் இணையதளத்தில் 24G, 24Q பதிவேற்றம் செய்யும் முறை, வருமான வரி கணக்கினை காலதாமதமாகவோ அல்லது தவறாக, சரியான தொகையைவிட குறைவாக தாக்கல் செய்தால் அதனை சரி செய்வதற்கான வழிமுறைகள் விளக்கப்பட்டது.
கூட்டத்தில் மாவட்ட கருவூல அலுவலர் அருணாசலம், மதுரை வருமான வரித்துறை அலுவலர் வெங்கடேஷ்வரன், கூடுதல் கருவூல அலுவலர் கல்யாணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.