ADDED : மார் 22, 2024 05:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேனி லோக்சபா தொகுதியில் ஆண்டிப்பட்டி, பெரியகுளம்(தனி), போடி, கம்பம், சோழவந்தான்(தனி), உசிலம்பட்டி, ஆகிய 6 சட்டசபை தொகுதிகள் உள்ளன.
லோக்சபா தேர்தல் ஏப்., 19ல் நடக்கிறது.
இதைத்தொடர்ந்து ஜூன் 4ல் ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. தேனி கொடுவிலார்பட்டியில் உள்ள தேனி கம்மவார் சங்கம் கல்லுாரியில் ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. இங்கு ஓட்டு எண்ணிக்கைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஒட்டுப்பதிவு இயந்திரங்கள் வைப்பு அறை, ஓட்டு எண்ணும் அறை, கட்டுப்பாட்டு அறைகள், செய்தியாளர்கள் அறை, பார்வையாளர்கள் அறை உள்ளிட்டவற்றை தேர்தல் நடத்தும் அலுவலர் ஷஜீவனா, டி.ஆர்.ஓ., ஷஜீவனா, டி.ஆர்.ஓ., ஜெயபாரதி உள்ளிட்ட அதிகாரிகள் பார்வையிட்டனர்.

