ADDED : மே 11, 2024 05:29 AM
மூணாறு: மூணாறு அருகே பள்ளிவாசல் எஸ்டேட் ஆற்றுக்காடு டிவிஷனைச் சேர்ந்தவர் ஜீப் டிரைவர் பிரசாந்த் 33. இவர் 2014 செப். ஒன்றில் மூணாறில் இருந்து ஆற்றுக்காடு பகுதிக்கு போதமேடு வழியாக ஜீப்பில் பயணிகளை ஏற்றிச் சென்றார்.
டிரைவர் உள்பட 20 பேர் ஜீப்பில் இருந்தனர். போதமேடு அருகே இறக்கத்தில் சென்ற ஜீப் கட்டுப்பாட்டை இழந்து தேயிலை தோட்டத்தினுள் கவிழ்ந்தது. அதில் ஒரு பெண் பலியான நிலையில் அனைவரும் பலத்த காயம் அடைந்தனர். மூணாறு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கு தேவிகுளம் குற்றவியல் முதல் வகுப்பு நீதிமன்றத்தில் நடந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி அருள் மைக்கிள் அலட்சியம், அதிவேகம், அதிக எண்ணிக்கையில் பயணிகள் ஆகியவற்றை சுட்டிக்காட்டி டிரைவர் பிரசாந்த்க்கு ஒன்றரை ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.