ADDED : ஜூலை 26, 2024 12:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : தேனி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் இன்று(ஜூலை 26) காலை 10:00 மணிக்கு தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது.
இந்த முகாமில் 18 வயது முதல் 45 வயதுடைய, 10ம் வகுப்பு தேர்ச்சி முதல் முதுநிலை பட்டபடிப்புகள், பொறியியல் பட்டபடிப்புகள், ஐ.டி.ஐ., படித்த வேலை தேடுபவர்கள் பங்கேற்கலாம். பங்கேற்பவர்கள் சுயவிபர குறிப்பு, ஆதார் நகல், புகைப்படம், கல்வி சான்றிதழ்களுடன் பங்கேற்க வேண்டும்.
மேலும் விபரங்களுக்கு 94990 55936 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.