ADDED : ஆக 15, 2024 04:08 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மூணாறு : குண்டளை அணை மூன்று மாதம் இடைவெளியில் நேற்று இரண்டாவது முறையாக திறக்கப்பட்டது.
மூணாறு, டாப் ஸ்டேஷன் ரோட்டில் 20 கி.மீ., தொலைவில் உள்ள குண்டளை அணை முக்கிய சுற்றுலா பகுதியாகும். கேரள மின்வாரியம் அணையை பராமரிக்கின்றது. இந்த அணை முழு கொள்ளளவை (62 அடி) எட்டியதால் மே 4ல் திறக்கப்பட்டது. இரண்டு மாதங்களுக்கு பிறகு ஜூலை 1ல் அணை மூடப்பட்டது.
இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக அணை நீர்பிடிப்பு பகுதியில் பலத்த மழை பெய்ததால் மீண்டும் அணை நிரம்பியது. வரும் நாட்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதால் மூன்று மாதம் இடைவெளியில் நேற்று இரண்டாவது முறையாக அணையில் இரண்டு ஷட்டர்கள் 50 செ.மீ., உயர்த்தப்பட்டு 2.60 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. அதனால் குண்டளை ஆறு கரையோர பகுதிகளுக்கு முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டது.