ADDED : மார் 25, 2024 05:45 AM

தேனி,: கிறிஸ்தவர்கள் ஏசு ஜெருசலேம் நகருக்குள் நுழைந்ததை கொண்டாடும் விதமாகவும், புனித வாரம் கொண்டாடத்தின் துவக்கமாகவும் கிருஸ்தவர்கள் குருத்தோலை ஞாயிறு ஊர்வலம் செல்கின்றனர்.
தேனி மதுரை ரோடு உலக மீட்பர் சர்ச் சார்பில் குருத்தோலை ஞாயிறு ஊர்வலம் பங்களாமேட்டில் துவங்கி சர்ச் வரை நடந்தது. இதில் பங்கேற்றவர்கள் கைகளில் குருத்தோலைகளில் சிலுவை போன்ற செய்ப்பட்டிருந்தை ஏந்தி சென்றனர். தொடர்ந்து திருப்பலி நடந்தது. பாதிரியார் முத்து தலைமை வகித்தார். உதவி பாதிரியார்கள் பர்னபாஸ், மார்டீன் முன்னிலை வகித்தனர்.
மார்ச் 28 ல் ஏசு அவருடைய சீடர்களுக்கு மரியாதை செய்ததை நினைவு கூறும் வகையில் நிகழ்ச்சியும், மார்ச் 30ல் ஈஸ்டர் சிறப்பு திருப்பலியும் நடக்க உள்ளது.
தேனி என்.ஆர்.டி., நகர் பரிசுத்த பவுல் சர்ச் சார்பில் குருத்தோலை ஞாயிறு ஊர்வலம் சர்ச் வளாகத்தில் துவங்கி பெரியகுளம் ரோடு, பழைய ஜி.எச்., ரோடு, சமதர்மபுரம், வழியாக சர்ச் வந்தடைந்தது. ஊர்வலத்திற்கு பாதிரியார் அஜித்ஸ்டேன்லி தலைமை வகித்தார். தொடர்ந்து பாதிரியார் மணிமாறன் திருப்பலி நிறைவேற்றினார்.

