ADDED : ஜூலை 05, 2024 05:25 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியகுளம்: பெரியகுளம் வழக்கறிஞர்கள் சங்கத்தினர், இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம், இந்திய சாட்சிய சட்டம் ஆகிய முப்பெரும் சட்டங்களில் பிரிவுகளின் திருத்தங்களை மத்திய அரசு ரத்து செய்யக்கோரி, ஜூலை 1 முதல் நீதிமன்றம் புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று இதே கருத்தை வலியுறுத்தி பெரியகுளம் தலைமை தபால் அலுவலகம் முன் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் பாலாஜி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். வழக்கறிஞர்கள் சங்கம் மாநில துணைத்தலைவர் பாலமுருகன், தென்மண்டல செயலாளர் முத்துராமலிங்கம் முன்னிலை வகித்தனர். செயலாளர் நாராயணசாமி, செந்தில்குமரன், ஏராளமானோர் பங்கேற்றனர்.