/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
நீதிமன்றங்களில் ஜூன் 8ல் லோக் அதாலத்
/
நீதிமன்றங்களில் ஜூன் 8ல் லோக் அதாலத்
ADDED : மே 29, 2024 04:24 AM
தேனி, : தேசிய, மாநில சட்ட பணிகள் ஆணைக்குழுக்கள் அறிவுறுத்தலின் படி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம், உத்தமபாளையம், ஆண்டிப்பட்டி, போடியில் உள்ள சார்பு நீதிமன்றங்களிலும், தேனி மாவட்ட நீதிமன்றத்திலும் ஜூன் 8 ல் லோக்அதாலத் நடைபெற உள்ளது. லோக் அதாலத்தில் நீதிபதிகள், வழக்கறிஞர்கள் உறுப்பினர்கள் அமர்வு முன்னிலையில் வழக்குகள் நடைபெறும்.
மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தொடர்பாக நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள், சொத்து, பணம் தொடர்பான உரிமையியல் வழக்குகள், தொழிலாளர் நலன் இழப்பீடு, சமாதானம் செய்ய கூடிய குற்ற வழக்குகள், ஜீவானாம்சம், நில ஆக்கிரமிப்பு வழக்கு, கல்விக்கடன், வங்கிகடன், காசோலை, குடும்ப வன்முறை, நுகர்வோர் வழக்குகள் உள்ளிட்டவை விசாணைக்கு எடுத்துக்கொள்ளபடும்.
நிலுவையில் உள்ள வழக்குகள் விரைவாக முடித்துக்கொள்ள வாய்ப்பு அளிக்கப்படுகிறது. பிரச்னைகளை சுமுகமாக தீர்க்க விரும்பும் நபர்கள் ஜூன் 8 ல் நடக்கும் லோக் அதாலத்தில் பயனடையலாம், என தேனி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர் அறிவொளி தெரிவித்துள்ளார்.