/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
இரு நாட்களாக குறைந்த வெயிலின் தாக்கம்
/
இரு நாட்களாக குறைந்த வெயிலின் தாக்கம்
ADDED : மே 12, 2024 04:00 AM
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி பகுதியில் கோடை வெயிலின் தாக்கம் கடந்த சில வாரங்களாக வாட்டி வதைத்தது. மே 4 ல் துவங்கிய அக்னி நட்சத்திர வெயிலால் பகலில் வெளியில் நடமாட முடியாமல் அனைவருக்கும் பாதிப்பை ஏற்படுத்தியது. பகலில் வெயிலால் ஏற்பட்ட வெப்பம் இரவு முழுவதும் புழுக்கத்தை ஏற்படுத்தியது. பலரும் தூங்க முடியாமல் தவித்தனர். மேச்சலுக்கு செல்லும் கால்நடைகள் உட்பட சிறு விலங்குகள், பறவைகள் அனைத்தும் கடும் பாதிப்பில் இருந்தன.
இந்நிலையில் கடந்த சில நாட்களில் ஆண்டிபட்டியில் பெய்த மழையால் வெப்பம் தணிந்தது. கோடை மழைக்கான சூழல் தொடர்கிறது. கடந்த இரு நாட்களாக மேகமூட்டம் அதிகம் இருந்ததால் வெயிலின் பாதிப்பு ஆண்டிப்பட்டியில் குறைந்துள்ளது.