/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பழங்குடியினருக்கு காளான் வளர்ப்பு பயிற்சி
/
பழங்குடியினருக்கு காளான் வளர்ப்பு பயிற்சி
ADDED : மார் 01, 2025 05:59 AM
சின்னமனூர் : மத்திய அரசின் அறிவியலில் சமநிலை அதிகாரம் அளித்தல், முன்னேற்ற பிரிவு, தமிழக அரசின் அறிவியல் தொழில் நுட்ப மாநில மன்றம், ஜெயராஜ் அன்னபாக்கியம் மகளிர் கல்லூரி விலங்கியல் துறை இணைந்து பட்டியலின மற்றும் பழங்குடி மக்களுக்கான காளான் வளர்ப்பு, மதிப்பு கூட்டல் பயிற்சியை கல்லுாரியில் நடத்தியது.
விலங்கியல் துறை பேராசிரியர்கள் காளான் வளர்ப்பு, மதிப்பு கூட்டல் எப்படி மேற்கொள்வது என்ற பயிற்சியை இரண்டு நாட்கள் நடத்தினார்கள். மூன்றாவது நாள் களப்பயிற்சியாக காமாட்சிபுரம் வேளாண் அறிவியல் மையத்தில் நடந்தது. நிறைவு நிகழ்ச்சி வேளாண் அறிவியல் மையத்திலும் நடந்தது. நிகழ்ச்சிக்கு அறிவியல் மைய இணை இயக்குநர் சிவராம் தலைமை வகித்தார். ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழக மாவட்ட மேலாளர் சரளா பேசினார்.
கல்லூரி விலங்கியல் துறை தலைவர் கேத்தரின், பேராசிரியர்கள் ஜெமீமா பிளாரன்ஸ் இணை பேராசிரியை போர்ஜியா, ஷெரீன் ரெபேக்கா உள்பட பலர் கலந்து கொண்டனர்.