/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கல்லுாரியில் தேசிய தொழில்நுட்ப கருத்தரங்கு
/
கல்லுாரியில் தேசிய தொழில்நுட்ப கருத்தரங்கு
ADDED : ஏப் 06, 2024 04:37 AM
தேனி : தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் கல்லுாரியில் தேசிய அளவிலான தொழில்நுட்ப கருத்தரங்கம் நடந்தது.
கல்லுாரி செயலாளர்கள் ராஜ்குமார், மகேஸ்வரன் தலைமை வகித்தனர். இணைச்செயலாளர் நவீன்ராம் முன்னிலை வகித்தார்.
கல்லுாரி முதல்வர் மதளைசுந்தரம் கருத்தரங்கின் நோக்கம் பற்றி பேசினார். ஏ.ஐ., இன்டர்நெட் ஆப் திங்ஸ், எம்படட், ஆட்டோ மொபைல் தொடர்பான புராஜக்ட்ஸ் சமர்ப்பிக்கப்பட்டது.
எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேசன் துறை சார்ந்த தொழில்நுட்பங்களுக்கு தேவையான மென்பொருட்கள், சென்சார்களை அடிப்படையாக கொண்டு இயங்க கூடிய தொழில்நுட்பங்கள் பற்றி விளக்கப்பட்டது.
நவீன தொழில்நுட்பம் தொடர்பான போட்டிகளில் மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த 16 கல்லுாரிகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர்.
கருத்தரங்கில் தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை நிர்வாகிகள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை துணை முதல்வர்கள் மாதவன், சத்யா செய்திருந்தனர்.

