/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஒருநாள் கணினி பயிற்சி
/
பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஒருநாள் கணினி பயிற்சி
ADDED : ஆக 29, 2024 08:40 AM
கம்பம்: உத்தமபாளையத்தில் பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஒருநாள் கணினி பயிற்சி வழங்கப்பட்டது.
மாநில கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனம் மற்றும் ஒருங்கிணைந்த பள்ளி கல்வித் துறை இணைந்து 6 முதல் 10 ம் வகுப்பு வரை பயிற்றுவிக்கும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு குருவள மைய பயிற்சி கம்பம் அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இங்குள்ள உயர் தொழில் நுட்ப கணினி ஆய்வகத்தில் 60 ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது. உத்தமபாளையம் ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவன விரிவுரையாளர் நாகஜோதி துவங்கி வைத்தார்கள். ஆசிரியர்கள் சூரிய பாலாஜி, சரவணன் கருத்தாளர்களாக செயல்பட்டனர். கம்பம் ஒன்றிய வட்டார வள மைய பயிற்சி ஒருங்கிணைப்பாளர் வித்யாசாகர்,ஆசிரிய பயிற்றுநர் ராஜபூபதி பயிற்சி கண்காணிப்பாளர்களாக செயல்பட்டனர்.
கணினி வழிக் கல்வியின் அவசியத்தையும், அதன் பயன்பாட்டையும் மாணவர்கள் எளிதில் தெரிந்து கொள்ளும் வகையில் நடத்தப்பட்டது.