ADDED : ஆக 18, 2024 05:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவதானப்பட்டி : கேரள மாநிலம், கோட்டயத்தைச் சேர்ந்தவர் தனீஸ்கான் 43. இவரது மனைவி ஹாஜிரா 40.
மூன்று பிள்ளைகளுடன் காரில் கோட்டயத்திலிருந்து- திண்டுக்கல் நோக்கி சென்று கொண்டிருந்தார். காரை தனீஸ்கான் ஓட்டி வந்தார். கார் காட்ரோடு பகுதியை கடந்து செல்லும் போது, எதிரே கொடைக்கானலுக்கு சென்று கொண்டிருந்த கார் மோதியது. இதில் தனீஸ்கான் சம்பவ இடத்திலேயே பலியானார். காயமடைந்த ஹாஜிரா, மூன்று பிள்ளைகள் திண்டுக்கல் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். விபத்து ஏற்படுத்திய கேரளா, திருவனந்தபுரத்தைச் சேர்ந்த கார் ஓட்டிவந்த டெல்வினிடம் 25, போலீசார் விசாரிக்கின்றனர்.

