ADDED : செப் 04, 2024 01:14 AM

தேனி : தேனியில் தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட பேரவைக் கூட்டம் மாவட்டத் தலைவர் துரைராஜ் தலைமையில் நடந்தது.
மாவட்டத் துணைத் தலைவர் இப்ராஹிம் வரவேற்றார். மாநிலத் துணைத் தலைவர் ராமமூர்த்தி, மாவட்ட இணைச் செயலாளர் கந்தசாமி, மாவட்டச் செயலாளர் முருகேசன் அறிக்கை வாசித்தார். மாவட்டப் பொருளாளர் சிவமணி நிதி நிலை அறிக்கையை சமர்பித்தார். மாநில துணைத் தலைவர் சுகுமாறன், அரசு ஊழியர்கள் சங்க பொருளாளர் முத்துக்குமார், சி.ஐ.டி.யு.,மாவட்டத் தலைவர் ராமச்சந்திரன் உள்பட பலர் பேசினர். கூட்டத்தில் வைகை அணையை துார்வார வேண்டும். ஆண்டிபட்டி பகுதியில் பைபாஸ் ரோடு அமைத்து வாகன நெரிசலை தவிர்க்க வேண்டும். திண்டுக்கல் - குமுளி அகல ரயில்பாதை பணிகளை விரைவில் துவக்க வேண்டும். தேர்தல் வாக்குறுதியாக தி.மு.க., அரசு அளித்த 70 வயது முடிந்த ஓய்வூதியதாரர்களுக்கு 10 சதவீத ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.