/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பெரியகுளம் குறுவட்ட போட்டி; ஆர்.டி.யூ., பள்ளி முன்னிலை
/
பெரியகுளம் குறுவட்ட போட்டி; ஆர்.டி.யூ., பள்ளி முன்னிலை
பெரியகுளம் குறுவட்ட போட்டி; ஆர்.டி.யூ., பள்ளி முன்னிலை
பெரியகுளம் குறுவட்ட போட்டி; ஆர்.டி.யூ., பள்ளி முன்னிலை
ADDED : ஆக 30, 2024 05:49 AM

பெரியகுளம் : பெரியகுளம் கல்வி மாவட்ட அளவிலான பெரியகுளம் ' டி' குறுவட்ட விளையாட்டு போட்டிகளில் ஜி.கல்லுப்பட்டி ஆர்.டி.யூ., மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் முன்னிலை பெற்றனர்.
பெரியகுளம் கல்வி மாவட்ட அளவிலான 'டி' குறுவட்ட விளையாட்டுப் போட்டிகள் லட்சுமிபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) வசந்தா துவக்கி வைத்தார்.
மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்க கல்வி) பொறுப்பு ஜான்சன், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் குபேந்திரன் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியை பேபி பள்ளிக்கொடியை ஏற்றினார். 14,17,19 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள், மாணவிகள் போட்டியில் பங்கேற்றனர்.
100 மீட்டர் முதல் 200, 400, 600, 800, 1,500, 3,000 மீட்டர் ஓட்டம், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், ஈட்டி எறிதல், வட்டு எறிதல் உட்பட பல்வேறு தடகள போட்டிகள் நடந்தது. இதில் உயரம் தாண்டுதல், ஈட்டி எறிதல் போட்டிகளில் லட்சுமிபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் முன்னிலை பெற்றனர்.
100 மீ.,200 மீ., 800 மீ.,தத்தி எட்டு வைத்து தாவுதல் போட்டிகளில் ஜி.கல்லுப்பட்டி ஆர்.டி.யூ., மேல்நிலைப்பள்ளி
மாணவர்கள் முன்னிலை பெற்றனர். 3000 மீ.,ஓட்டப்போட்டியில் வைகை அணை வரதராஜ் நகர்
ஸ்ரீ வல்லி வரதராஜ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் முன்னிலை பெற்றனர். லட்சுமிபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி உதவி தலைமை ஆசிரியர் தனபாலன், உடற்கல்வி ஆசிரியர்கள் நாகேஷ், முருகானந்தன், அம்பிகா மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் நடுவர்களாக பங்கேற்றனர்.-