/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஊராட்சியில் புதிய தெருவிளக்கு டெபாசிட் அரசு செலுத்த கோரி மனு
/
ஊராட்சியில் புதிய தெருவிளக்கு டெபாசிட் அரசு செலுத்த கோரி மனு
ஊராட்சியில் புதிய தெருவிளக்கு டெபாசிட் அரசு செலுத்த கோரி மனு
ஊராட்சியில் புதிய தெருவிளக்கு டெபாசிட் அரசு செலுத்த கோரி மனு
ADDED : செப் 01, 2024 06:05 AM

ஆண்டிபட்டி, : கிராமங்களில் புதிய தெரு விளக்குகள் அமைப்பதற்கான டெபாசிட் தொகையை மின்வாரியத்திற்கு அரசு செலுத்த வேண்டும் என ஊராட்சி தலைவர் அமைச்சரிடம் கோரிக்கை மனு அளித்தார்.
டி.ராஜகோபாலன்பட்டி ஊராட்சிக்குட்பட்ட 20 கிராமங்களில் 150 க்கும் மேற்பட்ட புதிய தெரு விளக்குகள் அமைப்பதற்கான ஏற்பாடுகளை ஊராட்சி நிர்வாகம் செய்து வருகிறது. புதிய தெரு விளக்கு அமைக்க ஒரு தெருவிளக்கிற்கு ரூ.20 ஆயிரம் மின்வாரியத்திற்கு வைப்புத் தொகையாக செலுத்த வேண்டி உள்ளது.
ஊராட்சியில் போதுமான நிதி இல்லாததால் புதிய தெரு விளக்குகள் அமைப்பதில் தாமதம் ஏற்படுகிறது. இந்நிலையில் ஆண்டிபட்டி ஒன்றிய பகுதியில் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரியசாமி அரசின் வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்தார். அப்போது டி.ராஜகோபாலன்பட்டி ஊராட்சித் தலைவர் வேல்மணி அமைச்சரிடம் வழங்கிய மனுவில்,'புதிய தெருவிளக்குகள் அமைக்க மின்வாரியத்திற்கு செலுத்த வேண்டிய டெபாசிட் தொகையை அரசு மூலம் செலுத்தி புதிய தெருவிளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்க', கோரினர்.
மனு குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் உறுதி அளித்தார்.
சிறந்த ஊராட்சிக்கான விருது பெற்ற ஊராட்சி தலைவர் வேல்மணியை அமைச்சர் வாழ்த்தினார். தங்க தமிழ்ச்செல்வன் எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் ராமகிருஷ்ணன்,மகாராஜன், சரவணகுமார்,மாவட்ட கவுன்சிலர் பாண்டியன் உட்பட பலர் இருந்தனர்.