நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆண்டிபட்டி, : ஆண்டிபட்டி காளியம்மன் கோயில் பொங்கல் விழா நடந்தது.
முதல் நாளில் திருமஞ்சகுடம் நீர் அழைத்து வரப்பட்டு மாவிளக்கு ஊர்வலத்துடன் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், பூஜைகள் நடந்தது. 2ம் நாளில் பக்தர்கள் பொங்கல் வைத்து தீச்சட்டி, பால்குடம், காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் பூஜைகள் செய்து பெண்கள் முளைப்பாரி ஊர்வலம் சென்றனர். இன்று இரவு அம்மன் சிங்க வாகனத்தில் நகர்வலம் சென்று பூஞ்சோலை அடையும் நிகழ்ச்சியுடன் பொங்கல் விழா நிறைவு பெறும். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.

