/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு தடையில்லா மின்சாரம் வழங்க ஏற்பாடு
/
மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு தடையில்லா மின்சாரம் வழங்க ஏற்பாடு
மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு தடையில்லா மின்சாரம் வழங்க ஏற்பாடு
மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு தடையில்லா மின்சாரம் வழங்க ஏற்பாடு
ADDED : ஜூன் 02, 2024 04:05 AM
தேனி: தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு 20 ஆண்டுகளுக்கு பின் தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இம் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை கடந்த 2004ல் துவங்கப்பட்டது.
இங்கு தினமும் உள்நோயாளிகளாக 1600 பேர், வெளி நேயாளிகளாக 3000 பேர் சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர். தேனி மாவட்டம் மட்டும் இன்றி, கேரளாவில் இருந்தும் அதிகளவில் நோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கின்றனர். இங்கு அவசர சிகிச்சைப் பிரிவு, ஒருங்கிணைந்த தாய் சேய் மகப்பேறு மருத்துவ சிகிச்சைப் பிரிவு, அவசர தீவிர சிகிச்சைப் பிரிவுகள் என 20க்கும் மேற்பட்ட துறைகள் உள்ளன.
டீசல் செலவு அதிகம்
உன்னதமான மனித உயிர்காக்கும் மருத்துவக் கல்லுாரிக்கு மாதந்திர மின் பராமரிப்பு நாளான்று மின்சாரம் தடை செய்து பல மணிநேரங்களுக்கு பின் மாலையில் மின்சாரம் வழங்கப்படும்.
மின்தடை நாளில் ஜெனரேட்டர் மூலம் குறிப்பிட்ட சில பகுதிகளுக்கு மின்சப்ளை வழங்கப்படும். மின்சாரம் கிடைக்காத பிற சிகிச்சை பிரிவுகளிலும், வார்டுகளில் உள்ள நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். அத்தியாவசிய பணிகளுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கும் திட்டத்தில் தேனி மருத்துவ கல்லுாரி இதுவரை சேர்க்கப்பட வில்லை.
இது குறித்து டீன் பாலசங்கர் கூறுகையில், இப்பிரச்னை என் கவனத்திற்கு வந்தவுடன் உடனடியாக மின்தடை நாளில் மாற்று மின்பாதையில் தடையில்லா மின்சாரம் வழங்கிட கோரினேன். அதற்கான ஏற்பாடுகளும் மின்வாரிய அதிகாரிகள் செய்துள்ளனர். தற்போது மின்தடை ஏற்படுவது இல்லை. ஏற்பட்டாலும் அவரச தேவைக்காக ஜெனரேட்டர்கள் வைத்துள்ளோம்' என்றார்.