/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
இராமலிங்க சவுடாம்பிகை அம்மன் கோயில் கும்பாபிஷேகம்
/
இராமலிங்க சவுடாம்பிகை அம்மன் கோயில் கும்பாபிஷேகம்
ADDED : ஜூன் 11, 2024 07:16 AM

போடி : தேவாரத்தில் ஸ்ரீரங்க வளநாடு தேவாங்கர் ஜாதி பொதுமைக்கு பாத்தியப்பட்ட சவுடாம்பிகை அம்மன் கோயில் அமைந்துள்ளது.
இக்கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த மூன்று நாட்களாக விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், கும்பாபிஷேக யாக குண்டல ஹோமம் நடைபெற்றது.
புண்ணிய ஸ்தலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீரை யாகசாலையில் வைத்து பூஜைகள் செய்தனர்.
கும்பாபிஷேகம் கோயில் செட்டுமை மோகன்ராஜன், பெரியதனம் மனோகரன் தலைமையில் நடந்தது.
கும்பாபிஷேகத்தை ஒட்டி நேற்று முன்தினம் காலை 6:25 மணி அளவில் சர்வ சாதகர் சிவசக்தி சண்முக சாஸ்திரிகள் முன்னிலை வகித்து கோபுர கலசங்களில் கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றினார். அதன் பின் இராமலிங்க சவுடாம்பிகை அம்மனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாரதனைகள் நடந்தது.
ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு அம்மனின் தரிசனம் பெற்றனர்.
விழாவில் அனைத்து லோத்தேகார் வம்சம், அனைத்து முச்சள தவரு வம்சம், அனைத்து சித்து கொள்ளுதார் வம்சத்தினர்,
அமர்ஜோதி ஸ்டோர்ஸ் உரிமையாளர் ராஜா, ரெங்கையன் செட்டியார் நினைவு அறக்கட்டளை நிறுவனர் பழனியாண்டவர், அறம் சட்ட அலுவலக வழக்கறிஞர் நாகராஜன், பில்டிங் டாக்டர் கடை உரிமையாளர் சிவசுப்பிரமணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் கோயில் நிர்வாகஸ்தர்கள், இளைஞர் அணி, மகளிர் அணி, விழாக் குழுவினர் பங்கேற்றனர். அன்னதானம் வழங்கப்பட்டன.