/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கண்மாயில் கிராவல் மண் எடுக்க எதிர்ப்பு
/
கண்மாயில் கிராவல் மண் எடுக்க எதிர்ப்பு
ADDED : ஆக 13, 2024 11:33 PM

தேனி: கொடுவிலார்பட்டி புதுக்குளத்தில் கிராவல் மண் எடுக்க விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தால் லாரிகளில் ஏற்றிய கிராவலை கொட்டிசென்றனர்.
தேனி அருகே கொடுவிலார்பட்டி புதுக்குளம் கண்மாய் மேற்குப்பகுதியில் 4 டிப்பர், 2 மண் அள்ளும் இயந்திரங்கள் மூலம் கிராவல் மண் அள்ளி கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக தேசிய விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் சீனிராஜ், பாசன விவசாயிகள் சுரேஷ், முருகன் ஆகியோர் நேற்று காலை மண் அள்ள விடாமல் தடுத்து, போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
சம்பவ இடத்திற்கு பழனிசெட்டிபட்டி போலீசார் வந்தார். வி.ஏ.ஓ., குமரேசன் லாரியில் அள்ளப்பட்டது வண்டல் அல்ல சிறிய அளவிலான சரளை நிறைந்த கிராவல் மண் என உறுதிப்படுத்தி, தாசில்தாருக்கு அறிக்கை அளிக்க உள்ளதாக தெரிவித்தார்.
இந்நிலையில் கிராவலை அள்ளிய இடத்திலேயே லாரி கொட்டி சென்றது. சம்பவ இடத்திற்கு நீர்வளத்துறை உதவிப் பொறியாளர் பிரவீன் ஆய்வு செய்து கூறியதாவது:
புதுக்குளம் கண்மாயில் இருந்து 2 விவசாயிகளுக்கு மட்டுமே வண்டல் மண் அள்ள அனுமதி ரசீது வழங்கி உள்ளோம்.
தற்போது இது சரளை கலந்த கிராவல் மண்ணாக இருப்பதால் இதை அள்ளுவதை நிறுத்தப்படும் என்றார். மண் கடத்தலுக்கு பின்னனியதில் தி.மு.க., நிர்வாகிகள் இருப்பதால் நடவடிக்கை இல்லை. போலீசார் கண்டும் காணாதது போல் உள்ளதாக விவசாயிகள் புலம்பித்தவித்தனர்.