/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தேவாரம் பஸ் ஸ்டாண்ட் கடைகள் ஏலம் விடாததால் வருவாய் இழப்பு; பொ.ப.துறை வாடகை நிர்ணயம் செய்து தராத அவலம்
/
தேவாரம் பஸ் ஸ்டாண்ட் கடைகள் ஏலம் விடாததால் வருவாய் இழப்பு; பொ.ப.துறை வாடகை நிர்ணயம் செய்து தராத அவலம்
தேவாரம் பஸ் ஸ்டாண்ட் கடைகள் ஏலம் விடாததால் வருவாய் இழப்பு; பொ.ப.துறை வாடகை நிர்ணயம் செய்து தராத அவலம்
தேவாரம் பஸ் ஸ்டாண்ட் கடைகள் ஏலம் விடாததால் வருவாய் இழப்பு; பொ.ப.துறை வாடகை நிர்ணயம் செய்து தராத அவலம்
ADDED : மார் 09, 2025 05:08 AM

தேவாரம்: தேவாரம் பஸ் ஸ்டாண்டில் 18 வணிக வளாக கடைகளுக்கு பொதுப்பணித்துறை வாடகை நிர்ணயம் செய்து தராததால் கட்டி முடிந்து ஓராண்டுக்கு மேலாக ஏலம் விடாமல் பயன்பாடு இன்றி உள்ளது. இதனால் பேரூராட்சிக்கு ஆண்டுக்கு ரூ.பல லட்சம் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
போடி, கம்பம் செல்லும் ரோட்டில் தேவாரம் பஸ்ஸ்டாண்ட் அமைந்து உள்ளது. தேவாரத்தில் இருந்து கம்பம், போடி, உத்தமபாளையம் மார்க்கமாக 5 பஸ்களும், திருச்சி, தஞ்சாவூர், திருப்பூர், கோவை, மதுரை, மேட்டுப்பாளையம் மார்க்கமாக 20 பஸ்களும் சென்று வருகின்றன. தேவாரம் பேரூராட்சி நிர்வாகம் மூலம் கலைஞர் நகர்ப்புற மேம்பாடு திட்டத்தின் கீழ் ரூ. 2 கோடி செலவில் 18 வணிக வளாக கடைகள், சுகாதார வளாகங்களுடன் கூடிய பஸ் ஸ்டாண்ட் கட்டு முடிக்கப்பட்டு பல மாதங்களாக திறப்பு விழா காணாமல் இருந்தது. 'தினமலர்' செய்தி எதிரொலியால் பஸ்ஸ்டாண்ட் பயன் பாட்டிற்கு வந்தது.
இந்நிலையில் பஸ்ஸ்டாண்டில் புதிதாக கட்டப்பட்ட வணிக வளாக கடைகள் ஏலம் விடாததால் ஓராண்டுக்கு மேலாக பயன்பாடு இன்றி காட்சி பொருளாக உள்ளன. கடைகளை ஏலம் விட கோரி பேரூராட்சி நிர்வாகத்திடம் வியாபாரிகள், வர்த்தகர்கள் கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை. இதனால் பேரூராட்சிக்கு ஆண்டுக்கு ரூ. பல லட்சம் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. பஸ் ஸ்டாண்டிற்குள் வரும் பயணிகள் பொருட்கள் வாங்க விரும்பினால் பஸ் ஸ்டாண்டிற்கு வெளியே வரவேண்டியுள்ளது. இதனால் பயணிகள் சிரமம் அடைகின்றனர். பஸ் ஸ்டாண்டிற்குள் கடைகள் பயன்பாடு இன்றி உள்ளதால் இரவில் சமூக விரோத செயல்கள் நடக்கும் கூடாரமாக மாறியுள்ளது. கடைகள் ஏலம் விடாததால் வியாபாரிகள் தற்காலிக கடைகளாக ரோட்டோரங்களை ஆக்கிரமித்து உள்ளனர்.
பொதுபணித்துறை அலட்சியம்:
இது குறித்து விசாரிக்கையில், 'பஸ் ஸ்டாண்ட் கடைகளுக்கு வாடகை நிர்ணயம் செய்து தர பொதுப்பணித்துறைக்கு பேரூராட்சி நிர்வாகம் பரிந்துரை செய்துள்ளது. ஆனால் பொதுப்பணித்துறை வாடகை நிர்ணயம் செய்யாமல் பல மாதங்களாக கோப்புகளை கிடப்பில் போட்டுள்ளதால் கடைகள் பயன் இன்றி உள்ளது.
தேவாரம் பேரூராட்சி நிர்வாகம் பொதுப்பணித்துறை வாடகை மதிப்பீட்டை பெற்று கடைகள் ஏலம் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகள், பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.