/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
போடியில் சேதம் அடைந்த ஆர்.ஐ., அலுவலக கட்டடம்
/
போடியில் சேதம் அடைந்த ஆர்.ஐ., அலுவலக கட்டடம்
ADDED : செப் 12, 2024 05:33 AM

போடி: போடியில் ஆர்.ஐ., அலுவலகம், குடியிருப்பு கட்டடம் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது.
போடி ஜே.கே., பட்டியில் ஆர்.ஐ.,குடியிருப்புடன் கூடிய அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்திற்கு பட்டா, பட்டா மாறுதல், சிட்டா. அடங்கல், வருமானம். சாதி, இருப்பிடம், முதியோர் உதவித் தொகை உள்ளிட்ட சான்றுகள் பெற தினமும் பொதுமக்கள் வருகின்றனர்.
இந்த அலுவலக கட்டடம் கட்டி 40 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. முறையான பராமரிப்பு இல்லாததால் கட்டடம் முழுவதும் விரிசல் ஏற்பட்டுள்ளது. குடியிருப்பு சுகாதார வளாகம் மேற்கூரை முழுவதும் சேதம் அடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. மழை காலங்களில் மழை நீர் அலுவலகத்திற்குள் சென்று விடுகிறது.
இதனால் கம்ப்யூட்டர், லேப்டாப் உள்ளிட்ட முக்கிய தளவாட பொருட்களை பாதுகாக்க முடியாமல் சிரமம் அடைந்து வருகின்றனர். புதிய கட்டடம் அமைத்து தர வருவாய் அதிகாரிகள் கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை.
பெரிய அளவில் அசம்பாவிதம் ஏற்படும் முன் சேதம் அடைந்த வருவாய் ஆய்வாளர் கட்டடத்தை அகற்றி விட்டு, புதிதாக சுற்றுச் சுவருடன் கூடிய ஆர்.ஐ., அலுவலகம் கட்டித்தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.