/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
விடுதியில் ஆவணம் இன்றி வைத்திருந்த ரூ.4.49 லட்சம் பறிமுதல்
/
விடுதியில் ஆவணம் இன்றி வைத்திருந்த ரூ.4.49 லட்சம் பறிமுதல்
விடுதியில் ஆவணம் இன்றி வைத்திருந்த ரூ.4.49 லட்சம் பறிமுதல்
விடுதியில் ஆவணம் இன்றி வைத்திருந்த ரூ.4.49 லட்சம் பறிமுதல்
ADDED : மார் 28, 2024 06:48 AM
தேனி: தேனி உள்ள தங்கும் விடுதியில் ஆவணங்கள் இன்றி, தஞ்சாவூரை சேர்ந்த நபரிடம் ரூ.4.49 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டு, பெரியகுளம் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
தேனி தொகுதியில் வெளியூர் நபர்கள் அனுமதியின்றி அதிக அளவில் விடுதிகளில் தங்கியிருப்பதாக மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் ஷஜீவனாவிற்கு புகார்கள் சென்றன. அவரது உத்தரவில் பெரியகுளம் ஆர்.டி.ஓ., முத்துமாதவன் தலைமையில் தேனி டி.எஸ்.பி., பார்த்திபன், இன்ஸ்பெக்டர்கள் உதயகுமார், செந்தில்குமார், பெரியகுளம் தாசில்தார் அர்ஜூனன், வருவாய்த்துறை அலுவலர்கள் அடங்கிய 9 குழுக்கள் தேனியில் உள்ள 29 தங்கும் விடுதிகளில் திடீர் சோதனை நடத்தினர். அதில் தேனி போலீஸ் ஸ்டேஷன் அருகே உள்ள லாட்ஜில் அனுமதி இன்றி பணம் வைத்திருந்த நபரிடம் இருந்து ரூ.4 லட்சத்து 49 ஆயிரத்து 500 கைப்பற்றப்பட்டது.
விசாரணையில் தகுந்த ஆதாரங்கள் ஏதும் சமர்பிக்கப்படவில்லை.
கைப்பற்றப்பட்ட பணம் பெரியகுளம் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.