/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
துப்புரவு தொழிலாளர்கள் கலெக்டரிடம் மனு
/
துப்புரவு தொழிலாளர்கள் கலெக்டரிடம் மனு
ADDED : ஜூலை 13, 2024 07:21 AM

தேனி, : தேனி மாவட்ட அனைத்து துப்புரவு தொழிலாளர்கள் சங்கம் (ஏ.ஐ.டி.யு.சி., ) சார்பில், கலெக்டர் ஷஜீவனாவிடம், மாவட்டச் செயலாளர் பிச்சைமுத்து, இந்திய குடியரசு தொழிலாளர் சங்க மாநில துணைச் செயலாளர் ஜெகநாதன், வனவேங்கை கட்சி தொழிலாளர் முன்னணி மாநில பொதுச் செயலாளர் உலகநாதன், ஆதித்தமிழர் துாய்மை தொழிலாளர் பேரவையின் மாவட்டச் செயலாளர் சென்றாய பெருமாள் ஆகியோர், 13 கோரிக்கைகள் அடங்கிய மனு அளித்தனர்.
அதில் தேனி நகராட்சியில் பழுதடைந்த துாய்மைப் பணிக்கான பேட்டரி வாகனத்தை சீரமைக்க வேண்டும்.
கலெக்டர் நிர்ணயித்து உத்தரவிட்ட ஒரு நாள் ஊதியம் ரூ.609 வழங்காத தேனி நகராட்சி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட 13 கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்ற கோரினர்.