/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
துவரை சாகுபடி பரப்பை அதிகரிக்க திட்டம்
/
துவரை சாகுபடி பரப்பை அதிகரிக்க திட்டம்
ADDED : ஆக 08, 2024 05:34 AM
தேனி: மாவட்டத்தில் கடந்தாண்டை விட இந்த ஆண்டில் துவரை சாகுபடி பரப்பை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக வேளாண் துறையினர் தெரிவித்தனர்.
மாவட்டத்தில் கடந்தாண்டு 715 எக்டேர் பரப்பளவில் துவரை சாகுபடி செய்யப்பட்டது. இந்தாண்டு மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தில்
கூடுதலாக 1250 ஏக்கர் சாகுபடி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.2500 வழங்கப்பட உள்ளது. துவரையை விவசாயிகள் ஊடுபயிர், வரப்பு பயிராக சாகுபடி செய்யலாம். உழவுப்பணி, உயிர் உரங்கள், இலைவழி தெளிப்பு உரம் ஆகியவற்றிற்கு மானியத் தொகை பயன்படுத்த வேண்டும்.
வட்டாரம் வாரியாக ஆண்டிப்பட்டி 450 ஏக்கர், கடமலைமயிலாடும்பாறை 170, பெரியகுளம் , தேனி, கம்பம் தலா 25, உத்தமபாளையம் 150, சின்னமனுார் 385, போடி 20 ஏக்கர் கூடுதலாக சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் விபரங்களுக்கு உதவி வேளாண் உதவி இயக்குனர் அலுவலகங்களை அணுகலாம் என வேளாண் இணை இயக்குனர் பால்ராஜ், துணை இயக்குனர் சின்னகண்ணு தெரிவித்தனர்.