ADDED : மார் 23, 2024 06:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் கல்லுாரியில் பவர் எலக்ட்ரானிக்ஸ் பற்றிய கருத்தரங்கம் நடந்தது.
கல்லுாரி செயலாளர் ராஜ்குமார் தலைமை வகித்தார். கல்லுாரி செயலாளர் மகேஸ்வரன், இணைச்செயலாளர் நவீன்ராம் முன்னிலை வகித்தனர். கல்லுாரி முதல்வர் மதளைசுந்தரம், மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லுாரி எலக்ட்ரிக்கல் அண்டு எலக்ட்ரானிக்ஸ் துறை பேராசிரியர் சரவணன் பேசினர். உறவின்முறை தலைவர் ராஜமோகன், துணைத்தலைவர் கணேஷ், பொதுச்செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் பழனியப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை கல்லுாரி துணை முதல்வர்கள் மாதவன், சத்யா, வேலை வாய்ப்பு அலுவலர் கார்த்திகேயன், எலக்ட்ரிக்கல் அண்டு எலக்ட்ரானிக்ஸ்துறை தலைவர் பாண்டிமகாராஜன் செய்திருந்தனர்.

