/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
7 டன் நிவாரண பொருட்கள் வயநாடு அனுப்பி வைப்பு
/
7 டன் நிவாரண பொருட்கள் வயநாடு அனுப்பி வைப்பு
ADDED : ஆக 07, 2024 05:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியகுளம் : கேரளா வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்க பெரியகுளத்தில் பிறர் நலன் நாடும் தன்னார்வ அமைப்பை சேர்ந்த இளைஞர்கள் ஒன்றிணைந்தனர். பெரியகுளம் பகுதியில் மளிகை கடைகள், அரிசி கடைகள் உட்பட பல்வேறு வணிக நிறுவனங்களில் அரிசி மூடைகள், பருப்பு மூடைகள், பிஸ்கட், காய்கறிகள், போர்வை, துண்டு, ஆடைகள், காலணிகள் உட்பட 7 டன் அத்தியாவசிய பொருட்களை சேகரித்தனர். ரூ.35 ஆயிரத்தை நிவாரணம் முகாமில் வழங்க லாரியில் கொண்டு சென்றனர்.