ADDED : பிப் 23, 2025 06:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உத்தமபாளையம் : உத்தமபாளையம் கருத்தராவுத்தர் கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் முகாம் கோகிலாபுரத்தில் ஏழு நாட்கள் நடைபெற்று வருகிறது.
அதில் சித்த மருத்துவ முகாம் நேற்று நடந்தது. காமயகவுண்டன்பட்டி சித்தா டாக்டர் சிராசுதின் தலைமையிலான மருத்துவ குழுவினர் சிகிச்சையளித்தனர். இருமல், காய்ச்சல், சளி , பிரஷர், சர்க்கரை நோய்களுக்கு சித்த மருந்துகள் வழங்கப்பட்டது.
ஏற்பாடுகளை திட்ட அலுவலர்கள் பிலால், முகமது பைஸ், முகமது பஷீர் ஆகியோர் செய்திருந்தனர். முன்னதாக பாலிதீன் ஒழிப்பு, குப்பை அகற்றுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் செய்யப்பட்டது.