ADDED : ஜூலை 06, 2024 05:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : சின்னமனுார் காமாட்சிபுரம் சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையம் சார்பில், நாட்டு மாட்டு சாணத்தில் மதிப்புக் கூட்டல் பற்றிய திறன் மேம்பாட்டுப் பயிற்சி நடந்தது.
வேளாண் மைய தலைவர் பச்சைமால் தலைமை வகித்தார். திட்ட ஒருங்கிணைப்பாளர் மகேஸ்வரன் வரவேற்றார்.
மனையியல் தொழில்நுட்ப வல்லுனர் ரம்யாசிவசெல்வி, நாட்டு மாட்டுச் சாணத்தில் மதிப்புக்கூட்டப்பட்ட தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கினார். பயிர் பாதுகாப்பு தொழில்நுட்ப வல்லுனர் கார்த்திக் பாண்டி தொழில்நுட்ப வல்லுனர் சபரிநாதன் பேசினர். அனுமந்தன்பட்டியை சேர்ந்த நாட்டு மாட்டு சாணத் தொழில்முனைவோர் சித்ரப்பிரியா அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.
பெண் விவசாயிகள் பங்கேற்றனர். மனையியல் தொழில்நுட்ப நிபுணர் நன்றி தெரிவித்தார்.