ADDED : ஆக 06, 2024 05:31 AM
கம்பம்: .- புதுப் பட்டி காமுகுல ஒக்கலிகர் மகாஜன சங்கத்தின் சார்பில் அரசு பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கும் , விளையாட்டில் மாவட்ட மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கும் பரிசளிப்பு விழா இளைஞர் மன்றத்தில் நடந்தது.
கிராம தலைவர் மற்றும் ஒக்கலிகர் சங்க தலைவர் சிவாஜி மோகன் தலைமை வகித்தார். செயலாளர் முரளிராஜன் முன்னிலை வகித்தார். பொருளாளர் லோகந்துரை, ஒய்வு தமிழாசிரியர் சேதுமாதவன் வரவேற்றார். முன்னாள் எம்.எல்.ஏ. ஜக்கையன், ஓய்வு தலைமை பொறியாளர் கிருஷ்ணசாமி, டாக்டர் மணிவண்ணன், முருகேசன், ஓய்வு டி.எஸ்.பி. ராஜ்குமார் பேசினர். விழாவில் 50 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு ஒக்கலிகர் சங்க நிர்வாகிகளும், சிறப்பு விருந்தினர்களும் பரிசுகளை வழங்கினார்கள். ஆசிரியைகள் சாரதா, வளர் நிலா மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை இளைஞர் அணி தலைவர் பிரபு, செயலாளர் முரளி, பொருளாளர் சிவசங்கர் செய்திருந்தனர். துளசி கண்ணன் நன்றி கூறினார்.