நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : தென்காசி மாவட்டம், சங்கரன் கோவில் தாலுகா, புளியம்பட்டி வடக்கு காலனியை சேர்ந்தவர் தர்மராஜ் 35. இவர் அரண்மனைபுதுார் முல்லைநகரில் வசித்தார். இவர் ஜோதி என்ற பெண்ணை திருமணம் செய்து ஒரு மகள் உள்ளார்.
இந்நிலையில் தர்மராஜ் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்து இருந்தார். இதனால் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. மனைவி பேசவில்லை என்ற விரக்தியில் தர்மராஜ், மார்ச் 2ல் தேனி ஆயுதபடை மைதானம் செல்லும் ரோட்டில் உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.உடல் முழுவதும் தீக்காயங்கள் ஏற்பட்டு தேனி அரசு மருத்துவக் கல்லுாரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலன் இன்றி மார்ச் 5ல் இறந்தார். தேனி போலீசார் விசாரிக்கின்றனர்.