/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வழி தவறி தவித்த சிறுவன் தாயிடம் ஒப்படைப்பு
/
வழி தவறி தவித்த சிறுவன் தாயிடம் ஒப்படைப்பு
ADDED : செப் 01, 2024 06:16 AM
ஆண்டிபட்டி, : ஆண்டிபட்டியில் இருந்து புள்ளிமான்கோம்பை செல்லும் டவுன் பஸ்சில் சென்ற சிறுவன் யார் என்று தெரியாத நிலையில் கண்டக்டர் சிறுவனை எதிரே வந்த டவுன் பஸ்சில் அனுப்பி ஆண்டிபட்டி போலீசில் ஒப்படைக்கச் செய்தார்.
தனது ஊர் பெற்றோர் குறித்த விவரங்களை சிறுவனுக்கு சொல்லத் தெரியாததால் சிறுவன் குறித்த விபரங்கள் சேகரிப்பதில் சிரமம் ஏற்பட்டது. அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் விசாரணைக்கு பின் தேனியில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு மையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அங்கிருந்தவர்கள் சிறுவனின் பெற்றோர் குறித்த தகவல்களை விசாரித்தனர். விசாரணையில் சிறுவன் கொண்டமநாயக்கன்பட்டியை சேர்ந்த கணேசன், ரூபா தம்பதியினரின் மகன் மாரிமுத்து 9, என தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து சிறுவனை அவனது தாயார் ரூபாவிடம் ஒப்படைத்தனர்.